சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

31 July 2014

உலக நிகழ்வு, கடவுள் மற்றும் கயாஸ் தியரி

இந்த வரியைப் படிக்க முடிகிறதா?”

எப்படிப் படிக்க முடிகிறது? – நமக்கு படிக்கத் தெரியும் மற்றும் நாம் கல்வியறிவு பெற்றவர்.
ஏன் படிக்கிறீர்கள்? – இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறதா?

இந்த பதிவை நான் எழுதினேன், நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர். ஏன்? இது எப்படி உங்கள் கண்ணில் பட்டது. நீங்கள் இதை படிப்பதற்கு, நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தேர்வும் ஒரு காரணம். உங்களுக்கு இந்த பதிவின் சுட்டி உங்களுக்கு ட்விட்டர் மூலமாக கிடைத்தது என வைத்துக்கொள்வோம். நான் பகிர்கிறேன். நீங்கள் என்னை பின் தொடர்ந்திருக்கலாம் அல்லது நீங்கள் பின் தொடர்பவர்கள் யாரேனும் மறுகீச்சு செய்திருக்கலாம் அல்லது வேறு யாராவது மூலமாக நீங்கள் இந்த பதிவை பார்த்திருக்கலாம். கேள்வி என்னவெனில் நீங்களும் என் பதிவும் சந்தித்தது எப்படி?

சில ஆண்டுகளுக்கு முன் +2 வேதியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினா ஒன்றுக்கு பதில் சரியான பதில் எழுதி பின்னொரு குழப்பத்தால் மாற்றி எழுத அது தவறாகி அதனால் ஒரு மதிப்பெண் போனது. என் கட்-ஆஃபில் 0.25 குறைந்தது. அதன் காரணமாக நான் நினைத்த கல்லூரியில் கடைசி சீட்டு கூட கிடைக்காமல் வேறுகல்லூரியில் சேர்ந்தேன். அந்த கல்லூரியில் தான் யுவராஜ் அவர்களை சந்தித்தேன். என்னை ட்விட்டருக்கு அழைத்து வந்தவர் நண்பர் யுவராஜ். அவரும் நானும் சிறுவயதில் ஒன்றாக படித்தோம் பின் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். அவர் மூலமாக தமிழ் கீச்சுலகம் அறிமுகமானது. அதனால் தான் என் எழுத்தை நீங்கள் படிக்கிறீர்கள்.

அப்படியானால். அந்த கேள்விக்கு சரியாக பதில் அளித்திருந்தால், நான் நினைத்த கல்லூரிக்கு போயிருப்பேன் யுவராஜை சந்தித்திருக்க மாட்டேன்ட்விட்டருக்கு வந்திருக்க மாட்டேன்இதையும் நீங்கள் படித்திருக்கமாட்டீர். இதுவும் ஒருவகையில் சாத்தியமானதே. இப்படி ஒரு நிகழ்வினால் ஏற்படும் மாற்றங்களின் சங்கிலியால் பிணைக்கப்பட்ட உலகத்தின் நிகழ்வு குறித்ததுதான் இந்தப்பதிவு. உலக சரித்திரம்.

இதே பதிவை நீங்கள் ஃபேஸ்புக் மூலமாக படித்திருந்தால் அதற்கும் தனிக்கதை உண்டு. நீங்கள் ட்விட்டருக்கு வந்தது இந்தப்பதிவினைப் பார்த்தது என பல கோணங்களிலிருந்து ஒன்று சேர்கிறது இந்த கதை. இப்படி ஒவ்வொரு சம்பவத்தையும் அணுகினால் அதன் பின் நொடிப்பொழுதில் மாறிப்போனதொரு கதை இருக்கும்.
மிகமுக்கியமான ஒன்று - அந்த கேள்விக்கு நான் எழுதிய பதிலினால் தான் நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்பது அர்த்தமல்ல. அதுவும் ஒரு காரணம் என்பதே கயாஸ் தியரி சொல்கிறது. இப்படியான சக நிகழ்வுகளின் கோர்வைதான் உலக சரித்திரம் என்பதை தசாவதாரம் படத்தில் கமல் விளக்கியிருக்கிறார்.

பத்து கமல்களும் சேர்ந்து அந்த கிருமி வயலை சுனாமியில் கலக்க வைப்பர். உதாரணம்: புஷ் நினைத்திருந்தால் ஃப்ளைட்டை திருப்பி அழைத்திருக்க முடியும். அவதார் சிங் ஏர்போர்ட்டில் மயக்கமடையவல்லை என்றால் ஃப்ளெட்சரால் வெளியே வந்திருக்கவே முடியாது. இப்படிப் பல உண்டு. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இணைந்திருக்கிறது. ஒவ்வொரு நிமிட தாமதம் அல்லது வேகம் நம்மை எங்கேயோ கொண்டு செல்கிறது என அர்த்தப்படுகிறது. இது குறித்து வந்த திரைப்படங்களுல் முக்கியமானது 12B. நம்மைச்சுற்றி எத்தனை விஷயங்கள் நம்முடன் சேர்த்து இயக்கப்படுகின்றன என்பதை இயக்குநர் அதில் சொல்லியிருப்பார்.

பட்டாம்பூச்சியின் படபடப்புக்கும் ஒரு புயலுக்கும் கூட தொடர்பு உண்டு என்பதை எட்வார்ட் லாரண்ஸ் என்பவர் நிரூபித்திருக்கிறார். இதனை ‘சென்சிடிவ் டிபண்டன்ஸ் ஆஃப் இனிஷியல் கண்டிஷன்ஸ்’ என்கிறார்கள். மிகவும் சிக்கலான கட்டமைப்பு கொண்ட ஒரு அமைப்புக்கு இந்த விதி பொருந்தும். மனிதன் தான் உலகின் மிகச்சிக்கலான கட்டமைப்பு என்பது பன்னாட்டு அறிஞர்களின் வாதம். ஒரு நொடியில் தவரவிட்ட பேருந்து விபத்துக்கு உள்ளாகியது போன்ற அன்றாட வாழ்வில் பல உதாரணங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு செயலும் நிகழ்வும் மற்றவரின் செயல்-நடவடிக்கை-மாற்றம் பொருத்ததே என்பது கயாஸ் தியரி. அதாவது ஆரம்ப நிலையில் மாறுதல் பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்தும் என்பதாகும். அதாவது ஒரு விஷயத்தின்/செயலின் ஆரம்ப நிலைப்பாடு வைத்தே முடிவு இருக்கும். [Sensitive Dependence of Complex Systems on Initial Conditions]

கயாஸ் தியரியை கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளாக ஆராய்ந்ததில் ஒரு சிறிய தெளிவு உண்டாகியிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டதே என்றாலும், எந்த ஒரு சம்பவத்திற்கும் சக நிகழ்வுகளே காரணம் என்றாலும்கடவுள்என்பது யார் என்ற கேள்வி முளைக்கிறது.

”2” இது என்ன? – இரண்டு.

எப்படி?

இப்படிப்பட்ட ஒரு கேள்வி தான் கடவுள் யார்? நாமாக உருவாக்கிக்கொண்ட விளக்கங்கள்தாம் பெருக்கெடுத்துக் கிடக்கின்றன. பல இடங்களில் பல விளக்கங்கள்  கிடைக்கின்றன.

குறிப்பு: வேதங்கள் பற்றிய மேற்கோள்கள் இணையத்திலும் சில சொற்பொழிவுகளிருந்தும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. அவை என்னளவிய மொழி பெயர்ப்பே. தெளிவுற வேண்டுமாயின் கூகிள் உதவி புரிவார்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

சிலை வழிபாட்டில் நம்பிக்கையில்லாத, கடவுள் ஒருவரே என்று நம்பக்கூடிய இஸ்லாமிய மதத்தின் Light of Sacred Scriptures – Islam – Chapter 112 Verse 124ல் கடவுள் விளக்கம் கூறப்பட்டிருப்பதாவது] கடவுள் ஒருவரே. பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர்; அவருக்கு உருவம் கிடையாது. (Eternal) அவரே சர்வ வல்லமை படைத்தவர். என்று சொல்லப்படுகிறது.

இந்து மதத்தில் மும்மூர்த்திகள் (Creator, Protector, Destroyer) என்றழைக்கப்படும் மூவரும்  இஸ்லாமிய மதத்தில் ஒரே கடவுளாக ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார். இந்து மதத்தில் கடவுள் விளக்கம் வேதங்களில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அவை தரும் விளக்கங்கள்:

இறைவன் ஒருவனே. வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். (RIG VEDA Book 1 Hymn 164 Mantra 46) இதே குறிப்பில், கடவுளுக்கு 33 பெயர்கள் மட்டுமே உள்ளது எனவும் இறைவனுக்கு ப்ரதீமா (உருவம், படம், ஒளி) கிடையாது எனவும் சொல்லப்படுகிறது. (Yadhur Veda Chapter 32 Verse 3)

இதற்கும் மேலாக, இறைவன் பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர் என்வும் கூறப்படிருக்கிறது. [Upanishads Chapter 6 Verse 9, Chapter 4 Verse 19, Chapter 4 Verse 20, Bhagawat Gita Chapter 7 Verse 20, Yadhur Veda Chapter 40 Verse 8]

கடவுள் என்பவர் இந்த விஷயங்களுக்கு பொருந்தவேண்டும். இதில் பொருந்தாதவர் கடவுளாக இருக்கமுடியாது. சற்று உற்று நோக்கினால், இரு பெரும் மதங்களும் ஒரே விஷயத்தைதான் சொல்கின்றன என்பது புலப்படும். வழிபாட்டு முறைகளும் பெயர்களும் தான் வேறுபடுகிறது. இரு மதங்களிலும் சமதர்மங்களை வலியுருத்தும் கிளைக்கதைகள் உள்ளன. ஜாதி மத பேதம் இடையினில் புகுத்தப்பட்டது என்பதற்கு இவ்விரு வேதக்குறிப்புகள்  சான்றாகும்.

பிரிவினை உண்டானது மனிதனால் தான் என்பது என் கருத்து. இதற்கு பெரிய வரலாறே இருக்கிறது. பகுத்தறிவு கூட்டத்தில் ஒருமுறைநாம் நம்பும் ஒரு விஷயத்திற்காக அடுத்தவர் நம்பிக்கையை புண்ணாக்கலாமா?” என்று கேட்டேன்.

“அது நம்பிக்கையின் உண்மைத்தன்மை பொருத்தது” என்ற ஒருவர், சில மூட நம்பிக்கைகளையும் மனிதத்தில் சாதி எப்படி புகுந்தது என்றும் ஆதாரங்களோடு காண்பித்தார். சிறிய உதாரணமாக ’ஆமை புகுந்த வீட்டினை’ எடுத்துக்கொள்ளலாம். திறந்துகிடக்கும் வீட்டினுள் ஒரு ஆடோ மாடோ நுழைய சில நொடிகளே போதும். ஆனால் ஆமை நுழைய பலமணி நேரமாகும். அப்படி நுழையும் ஆமையை அகற்றாத சோம்பேறிகள் இருக்கும் வீடுதான் உருப்படாது என்பதே இதன் உட்பொருள் ஆனால் இன்று இந்த அர்த்தத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை.

மேலோட்டமாகவே இருக்கும் இந்த குறிப்புகளுன் மூலம் ஒன்றை மட்டும் அறியலாம். எந்த ஒரு அறிவியல் அமைப்புகளும் எதேனும் தத்துவத்தை சார்ந்தே இருக்கும். மதங்கள் உட்பட. இன்று வழக்கத்தில் இருக்கும் பிரிவினைகள், சம்பிரதாயங்கள் ஏற்றத்தாழ்வுகள் இடையில் புகுத்தப்பட்டவையே என்பது வரலாற்றை உற்று நோக்கினால் தெரியும்.

இது எங்கே ஆரம்பித்தது? இந்த சிஸ்டத்தை வடிவமைத்தது யார்? அதாவது இந்த உலகத்தை உருவாக்கியது யார்?

சிலருக்கு அது கடவுள் சிலருக்கு BIG BANG THEORY. இரண்டுமே இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ’இடைப்புகுத்தல்’ ஏதுவும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், பிரிவினை, மூட நம்பிக்கைகளை நீக்கிவிட்டால் மேற்கண்ட வேத மொழிகள் அவற்றின் தூய்மை மற்றும் நம்பகத்தன்மை காரணமாக உண்மையாகவே இருக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அனைவரும் சமமே என்பதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. ”கடவுள் என்பது கற்பனையே! எல்லாம் அறிவியல்” என்ற வாதத்தைப்போல, BIG BANG THEORYயும்இப்படி உருவாகி இருக்கலாம்” என்பதே தவிர இப்படித்தான் என்பது இல்லை.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது செத்துப்போனால் தான் தெரியும். அதுவரையில் ஒரு முடிவுக்கு வரவும், உலகம் உருவானது எப்படி என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படும் வரையிலும் கடவுளை (இடையிலான பிரிவினைகள் சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் தவிர்த்து ) நம்புகிறேன் நான்.

மாற்றுக்கருத்து இருப்பின் தயைகூர்ந்து பகிரவும்.
-    
    -  ஷா.