சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

18 April 2014


எக்ஸைல்...


சாரு நிவேதிதாவின் எக்ஸைல் நாவலைப் பற்றிய எனது அனுபவத்தை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் ப்ரியாவிற்காக எழுதிய கடிதம் இது.

செல்லக்கட்டி,

நான் உன்மேல் வைத்திருக்கும் காதலைப்பற்றி உனக்குத் தெரியாதா? நான் உன்னை மதிக்கவில்லை என்கிறாய். எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா?என்னால் எதிலுமே ஈடுபடமுடியவில்லை. உன்வார்த்தைகள், என் இதயத்தைக் கிழித்து சிதைத்திருக்கிறது. இரண்டு நாட்கள் ஆகியும் அதிலிருந்து இன்னும் இரத்தம் கசிந்துகொண்டிருப்பதை நீ அறிவாயா என் கண்ணே?நீ பேசினால் மட்டுமே அதனால் மீண்டும் துடிக்க முடியும்.

உன்னிடம் கடந்த இரண்டு நாட்கள் சரியாகப்பேசாததற்கு யார் காரணம் தெரியுமா?

சாருநிவேதிதா!

அவன் மனுஷனே இல்லை. ராட்ஷசன். இந்த மாதிரியெல்லாம் புத்தகம் எழுதினால் நான் என்ன செய்வேன் சொல். என்னால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை. வேலைமுடித்து வீட்டிற்கு வந்தவுடன் என் கைஅனிச்சைச் செயலாய் எக்ஸைலைத்தான் தேடுகிறது. இரவில் தூக்கம் கூட எனக்கு முக்கியமாகப்படவில்லை. கனவில்கூட நீ வரவில்லையென்றால் பார்த்துக்கொள். இனி சிலமாதத்திற்கு சாருவின் புத்தகத்தைப் படிக்ககூடாதென முடிவெடுத்திருக்கிறேன்.

புத்தகத்தைப்பற்றி உன்னிடம் நிறைய பேசவேண்டும். உன் முத்தச் சப்தத்தைக் கேட்காமல் என் காதுகள் படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமா. உனது அழைப்பிற்காகக் காத்திருக்கிறேன்.

காதலுடன்,
கார்த்திக்

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸிபனியனும் - இதுசாருநிவேதிதாவின்முதல்நாவல்!

~~~00~~~

இதற்கு அவள் அனுப்பிய பதில்.

Honey,

Hurting you suffered me more than you. I went real mad without talking to you for two hard days.

Guessed it! That it should have been Charu Nivedhithaa. Even last year when you were reading his Zero Degree, you didn't talk to me well for "a week". Remember? Moreover, after you finished reading it, you were talking only about that for a month! In that one month, I was able to see many changes in you.

Now it's Exile! I wouldn't have pestered you if you had told that you were reading it. I'm happier than you for that you're reading Charu. You would've learned many tricks;) Even I'm very much interested to know about Exile. Call you tonight. To heal your wounds!

Je t'aime…

With love forever,
Priya

ஸீரோடிகிரி - இது சாரு நிவேதிதாவின் இரண்டாவது நாவல்!

~~~00~~~

சாருவின் எக்ஸைல் ஒரு ஆட்டோ ஃபிக்சன் நாவல்! ஒரு ஊருல ஒரு ராஜா போன்ற காலாவதியான நடைகளை இன்றும் அரைத்துக் கொண்டிருக்கும் பல எழுத்தாளர்கள் மத்தியில் இவர் மட்டும் விசித்திரம். நான்-லீனியர், லிப்போக்ரமேட்டிக், ஆட்டோ ஃபிக்சன் என தமிழ் இலக்கியத்தை வேறுநிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்.

சாருவை பலரும் தூற்றுவதைப் பார்க்கிறேன். அவரின் எழுத்தைப் புரிந்துகொள்வதற்கு ஒரு தனி மனநிலை வேண்டுமென்று தோன்றும். ஏ.ஆர்.ரஹ்மானின் தற்போதுள்ள பாடல்களைக் கேட்டுவிட்டு சிலர் "இவர் 1990களில் இசையமைத்ததைப் போல தற்போது இசையமைக்கவில்லை" என்பார்கள். அப்போது எனக்குத் தோன்றும், எனது வருங்கால சந்ததி இன்னும் இருபது வருடங்கள் கழித்து, ரஹ்மானின் அப்போதையப் பாடல்களைக் கேட்கும்போது "இவர் 2010களில் இசையமைத்ததைப் போல தற்போது இசையமைக்கவில்லை" என்பார்கள் என்று. அதேபோல சாருவின் எழுத்துகளும் இன்னும் சிலபல வருடங்கள் கழித்துக் கொண்டாடப்படும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

~~~00~~~

முக்காத குறிப்பு: கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்கள் என்று எழுதினாலே அய்யய்யோ ஆபாசம் என்று சிலர் அலறுகின்றனர். இதில் ஆண்களும் விதிவிலக்கல்ல. அப்படி எண்ணுபவர்கள் தயவுசெய்து இந்தப் புத்தகத்தைத் தொட்டுகூடப் பார்க்க வேண்டாம். 

ராஸலீலா - இது சாருநிவேதிதாவின் மூன்றாவது நாவல்!

~~~00~~~

எக்ஸைல் நாவல் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கும் இத்தளத்தின் உரிமையாளர் நண்பர்  ஷாவிற்கும் இடையே நடந்த உரையாடல்.

கார்த்திக்: எக்ஸைல் 250 பக்கம் படிச்சிட்டேன் ஷா... என்னய்யா மனுஷன் அவரு... என்னா நடை… சும்மா கடகடகடன்னு போகுது... ஸ்டன்னிங்!

ஷா: தட்ஸ் வை சாரு இஸ் சாரு.

கார்த்திக்: யா...!

ஷா: எந்த சேப்டர் வரீங்க?

கார்த்திக்: திவாகர் பத்தி அஞ்சலி பேசுறது…

ஷா: இதுக்கே இப்படி சொல்றீங்க. இன்னும் கொக்கரக்கோ ஃபுல்டைம் என்ட்ரி குடுக்கல. அதுக்கப்புறம் என்ன ஆகும்னு நினச்சு பாத்தா. ப்ளீஸ், படிச்சிட்டு குடுங்க மறுவாசிப்புக்கு வேணும்.

கார்த்திக்: கொக்கரக்கோ செம்மங்க... மரணமாஸ்... ஸீரீயஸா ஃபீல்பண்ணிட்டு இருக்கும்போது காமெடி பண்ணிட்டு போறார்... புக் மூடிவச்சிட்டு சிரிச்சிட்டு இருந்தேன்...

ஷா: போக போக நாரடிச்சிடுவான்ங்க. ஒரே ஒரு கேள்வி கேப்பான் பாருங்க. நான்லாம் நாள் பூரா நெனைச்சு நெனைச்சு சிரிச்சேன்.

காமரூப கதைகள் - இது சாருநிவேதிதாவின் நான்காவது நாவல்!

~~~00~~~

செக்ஸ்: செக்ஸைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமையே பலப்பிரச்சனைகளுக்கு காரணி. இந்தக் காமத்தினால் அலைக்கழிக்கப்படுவதால், இயன்றவன் உடல் ரீதியாகக் கற்பழிக்கிறான், இயலாதவன் மனதால் கற்பழிக்கிறான். இதற்கு நல்லவன் கெட்டவன் என்ற பேதமெல்லாம் இல்லை. உடல்ரீதியான கற்பழிப்பிற்கு கணக்குகள் இருக்கின்றன. கற்பனைக் கற்பழிப்பிற்கு? ஒரு பெண் கடந்து செல்லும் 60 நொடியில், 60 பேரால் 600 முறைக் கற்பழிக்கப்படுவது நிதர்சனமான உண்மை. காரணம்?

செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு இங்கே எத்தனை பேருக்கு தைரியம் இருக்கின்றது?  சாரு பேசிய சில விஷயங்களில் உதாரணம் கொடுத்துச்சுட்டிக்காட்டுவதற்கு கூட எனக்குத் தைரியமில்லை. சந்திரமுகியில் ரஜினிக்கும் வடிவேலுவின் மனைவிக்கும் இடையே நடக்கும் இரட்டை அர்த்த ஜோக்கிற்கு விழுந்து விழுந்து சிரிக்கும் நாம், வெளிப்படையாகப் பேசினால் அதனை ஆபாசம் என்கிறோம். இது எந்த விதத்தில் நியாயம்?

செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாதவரை கற்பழிப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும், கணவன் மனைவிக்கு இடையேயும் கூட!

~~~00~~~

இந்த எக்ஸைல் நாவலில் காதல், காமம், இலக்கியம், பக்தி, ஆன்மீகம், நட்பு, அரசியல் என என்னென்னவோ கொட்டிக் கிடக்கின்றன. நமக்கு தேவையானவற்றைப் பொறுக்கி எடுத்துக்கொள்ளலாம். அபாரமான நடை! பிடிக்காத சப்ஜெட்டிற்குள் அவர் நுழையும்போது கூட அவரின் அசாத்தியமான நடை நம்மை அவரோடு இழுத்துச் செல்வது நாவலின் மிகப்பெரிய பலம்.

தேகம் - இது சாருநிவேதிதாவின் ஐந்தாவது நாவல்!

~~~00~~~

நான் படிக்கும் சாருவின் நான்காவது நாவல் இது. நிறைய இடங்களில் தேடி, என் கைக்கு சிக்காமல் நீண்டநாள் கழித்து, பயங்கர எதிர்பார்ப்புடன் படித்த நாவல். அதுபோக, ஷா இந்த நாவலைப்பற்றி கொடுத்த ஹைப் வேறு. பொதுவாக இதுபோன்ற எதிர்பார்ப்புடன் நான்படித்த மிகச்சிறந்த அனேக நாவல்கள் என்னைப் பெரிதும் பாதித்ததில்லை. இதற்குதான் இவ்வளவு ஹைப்பா என்று எண்ணத் தோன்றும். அதற்கு எக்ஸைல் விதிவிலக்கு!

ஆனால் சிலவிஷயங்கள் நான் ஏற்கனவே அவர் புத்தகங்களில் படித்ததாகவும், அவருடைய பேச்சுகளில் கேட்டதாகவும் இருந்தது கொஞ்சம் சலிப்புதான். இதுவரை சாருவின் எந்தப் புத்தகமும் படிக்காதவர்களுக்கு இந்தநாவலைப் படிக்கும்போது ஒரு பரவச உணர்வு ஏற்படும் என்பதில் நோடவுட்ஸ்!

Bonjour!

எக்ஸைல் - இது சாருநிவேதிதாவின் ஆறாவது நாவல்!

~~~00~~~


- த. ராஜன்

12 comments:

  1. ALL RUBBISH ARE BEING APPRECIATED BY THE EQUIVALENT VAGABONDS HERE

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. இலக்கியம் என சாருவும் சாரு காட்டியதும் எங்களை ஏமாற்றியதில்லை.

      பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

      Delete
  2. debonairblog.com will be much more interesting, funny and scandalous than all charu's novel bullshits..

    read pa.singaaram, jeyamohan, naanjil for real writing..charu is a duplicate writer..

    நீங்க இன்னம் வளரனும் தம்பி..

    ReplyDelete
    Replies
    1. ப. சிங்காரம், ஜெமோ, நாஞ்சில் என எல்லாரையும் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இவர்களுக்கும் சாருவுக்கும் உள்ள வித்தியாசத்தை சாருவே எவ்வளவோ முறை சொல்லிவிட்டார். அவர் சொல்லியே புரியாத உங்களுக்கு நான் என்ன சொல்லிப்புரியவைப்பது???

      எங்கள் வளர்ச்சியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நன்றி.

      Delete
    2. Thambi "Pachapullaya" irukkiye..
      Vasaganukke vithiyasam puriyanum, Charuve sollittaram Cahruve, nalla varuthu vayila.

      Delete
    3. I am not interested in replying or even lending my ears to Anonymous blabbers. Try Coming out with a Name

      Delete
  3. சா.நி. யின் எழுத்து பற்றி என்று சுஜாதா ம** என்று ஒரே வார்த்தையில் குறிப்பிட்டிருக்கிறார். உங்களுக்கு அது மணக்கிறது, என்ன சொல்ல?

    ReplyDelete
  4. How much did he pay you?

    ReplyDelete
  5. சிலருக்கு சோறு பிடிக்கும், சிலருக்கு தோசை பிடிக்கும் சிலருக்கு வெறு வயிற்றுடன் கிடக்கத்தான் பிடிக்கும்...இது தான் பிடிக்க வேண்டும் எல்லோருக்கும் எனும் நியதியில்லை.
    உங்களுக்குச் சாரு பிடிக்கிறதா? பிடிக்கட்டும்...அதை அடுத்தவருக்கு சிபார்சு செய்யுங்கள், திணிக்காதீர்கள்.
    சாரு பக்கம் பக்கமாக இணையத்தில் எழுதுவது தானெழுதியதைத் தானே மெச்சுவதே, இதை கிராமங்களில் "பொடி மட்டை, தும்முவது போல்" என்பார்கள்.
    இந்த அலப்பறையே பெரிய கொடுமை!! கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியின் புலப்பல்.ஆனால் சாரு
    காரியக் கிறுக்கன் - தன் கோவணத்துக்குக் கூட வேலை என எதுவும் செய்வதில்லை, ஆனால் ரெமி மாட்டினுக்குப் பிச்சை எடுப்பார்.
    தமிழகம் குடியால் சீரழிகிறது, இவர் இலக்கிய ஆய்வு என இளைஞர்களைக் கூட்டிக் குடிபற்றிய நீக்குப் போக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்.குடி இல்லாவிடில் அந்த ஆய்வுகளுக்கு ஒரு நாயும் செல்லாது.
    எங்களிடம் உள்ள இலக்கியமே படிக்க நேரமற இன்றைய இளைஞர்களை ஏதோ ஏதோ எல்லாம் படிக்கச் சிபார்சு செய்கிறார்.
    இணையத்தில் இவர் நித்தியானந்தா பரப்புரை செய்தது நீங்கள் அறியாததல்ல! இப்படி (ஆ)சாமியார்களிடம் இளைஞர்களைத் தள்ளும் பணியையும் அப்பப்போ செய்கிறார்.என்ன? காலத்துக்குக் காலம் (ஆ)சாமிகள் மாறும்...
    இணையத்தில் பெண்களுடன் அடித்த கூத்து உலகறியும்.
    வக்கிர பாலியல் ஆர்வமே இவர் எழுத்தில் விஞ்சி நிற்பது, அதை வைத்து பல சபலநிலையில் இருக்கும் இன்றைய இளைஞர்களை எளிதாக அமுக்கி தன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கபடதாரி!
    சொல்லுவதெல்லாம் பொய், முன்னுக்குப் பின் முரண். வேத வாக்கு என எழுதுவார்!!!, பின் அதையே எடுத்து விட்டு! நான் எப்போ எனப் பொய் பேசக் கூசமாட்டார்.
    மொத்தம் நல்ல மனநோய் மருத்துவரை அணுகவேண்டிய ஜீவன்.இப்படியே இவர் இருந்தால் ஒரு நாள்
    இவர் "சொம்பு தூக்கி" களாலே பழி தீர்க்கப்படுவார்.
    பலர் இவரிடம் இலட்சக் கணக்கில் இழக்கிறார்கள். அவர்கள் விழித்துக் கொள்ளும் போது இவருக்கு ஆபத்து உண்டு.
    பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம், சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்றமுடியாது. இது இவரைப் பொறுத்தமட்டில் அரங்கேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இங்கு பகிரப்பட்டிருப்பது இலக்கியம் குறித்ததே. அது யாருடையது எவருடையது எனக்கவலை கொள்வதில் எங்களுக்கு (எனக்கு) நாட்டமில்லை. மன்னிக்கவும்.

      சாரு குறித்த உங்கள் புரிதலை தெளிவாக விவரித்துள்ளீர். இது உங்கள் நிலைப்பாடு. ஆனால் இங்கு பேசப்பட்டிருக்கும் விடயம் இலக்கியம் குறித்ததே தவிர இலக்கியவாதி பற்றியதல்ல.
      இது ஒரு புத்தக வாசிப்பு அனுபவம். நீங்கள் சொன்னதுபோல் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ரசனை. இதில் நாங்கள் சாருவை நாங்கள் எந்த இடத்தில் உங்களுக்கு திணித்திருக்கிறோம் என்பதைக் காட்டுங்கள். பிறகு பேசுவோம்.

      Delete
  6. படித்ததில் பிடித்தது:

    செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாதவரை கற்பழிப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும், கணவன் மனைவிக்கு இடையேயும் கூட!

    ReplyDelete
  7. nan innum saruvin novelkalai padikkave illai.padikkummunnar kolithipodaranga. after reading your blog i have decided and will comment later

    ReplyDelete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன