சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

30 October 2012

சின்மயி...


முடிவோ எமக்கிலை; மரணம் சொற்பிழை- 
உலகம் கற்சிலை,
உமிழ்வோம் எச்சிலை;

சிறைகள் அடைக்கட்டும்,
சிதைகள் எரிக்கட்டும் ,
ரணங்கள் வதைக்கட்டும்,
 
பிணங்கள் திசை எட்டும்;

முல்லை துஞ்சிய முதுபெரும் புலிக்கு முப்பதாண்டுகள்
மூச்சுத் திணறினீர்;
முள்வேலிக்குள் ஜனிக்கும் புலியால்
 அற்றுத் தீர்வீர்! 
முற்றும் திண்ணம்.

ஈழம் ஓர் நாள் நனவாய் மலரும் - அதன்
தேசிய கீதமும் என் விரல் எழுதும்.


சமீபத்தில் பிரபல தமிழ் கீச்சர் ’ராஜன்லீக்ஸ்’ ராஜன் உட்பட ஆறு பேர் மீது பிண்ணனிப்பாடகி சின்மயி அளித்த புகாரின் பேரில் ராஜன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே…

இது குறித்து தமிழ் தோழர்களின் ஒரு சிறிய அலசல்…

இந்த பிரச்சனை குறித்து எத்தனையோ பேர் தம் கருத்தை பதிவு செய்துவிட்டனர் என்றாலும்,

இந்த சின்மயி - ராஜன் பனிப்போர் பற்றி உறுதியான ஒரு நிலைப்பாடு எடுக்க அவர்கள் இருவருடன் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது பயணித்திருக்க வேண்டும் என்றாலும்,
  
எங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டியது எங்கள் கடமையாக உள்ளது. காரணம்,  அவர்களுடன் பயணித்த ஒரு அன்பர் எங்கள் குழுவிலும் இருக்கிறார்.

ராஜனும் நாங்களும்…
          
     நாங்கள் ராஜன் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறோம் ஆனால் நேரில் சந்தித்தது கிடையாது. அதற்கான இருமுறை முயன்றும் முடியாமல் போனதன் முழுக்காரணமும் நாங்கள் தான்.

எங்கள் குழுவில் இருவர் ராஜன் மீது மிகுந்த பற்றுடையவர்கள். அவரது எழுத்தாளுமைக்குச் சான்றுதான் மேற்கண்ட கவிதை. அப்படியான நண்பன் ஒருவன் தன் தொலைபேசி எண்ணை ராஜன் அவர்களிடம் கொடுத்து தனக்கு பிறந்தநாள் வருவதாகவும் அன்று அவரிடம் பேச ஆசைப்படுவதாகவும் கூறினான்… சற்றும் எதிர்பாராமல், நண்பனின் பிறந்தநாளன்று அழைத்தார் ராஜன். யாரென்றே தெரியாத ஒரு கடைநிலை கீச்சாளனின் விருப்பத்துக்காக முண்ணனி கீச்சாளர் அழைத்து பேசியது மிகுந்த ஆச்சரியமே!

ராஜன் அவர்களின் நண்பரும் பிரபல கீச்சாளருமான டேவிட் (@freeyavudu) என்பவர் எழுதியிருக்கும் குடைச்சல் கேள்விகள்’ இன்னும் பலவற்றை வெளிப்படுத்துகின்றது.
  
   ராஜன் அவர்களைப்பற்றி நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை…… ஆனால் சின்மயி பற்றி சொல்லியே ஆகவேண்டும்…

சின்மயி அவர்களின் நம்பகத்தன்மை இழப்பு:
    
     யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பது எங்களது குறிக்கோள்.

அப்படி நிறையபேரிடம் கேள்வி கேட்டிருக்கிறோம். சிலரிடம் நேரடியாகவும் சிலரிடம் இணையம் மூலமாகவும். ”சர்ச்சைக்குறிய அந்த ட்விட்டை சின்மயி ட்விட்டியிருந்தார். நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை அழித்துவிட்டார்” எங்கள் நண்பர் கூறினார். மேலும் ராஜன் அவர்களின் இந்த பதிவு: http://www.rajanleaks.com/2012/03/blog-post.html காரணமாகவும் சின்மயி அவர்களிடம் ட்விட்டரில் தொடர்பு கொண்டோம்…

”ராஜன் அவர்கள் பதிவில் இருந்த சில கேள்விகளையும் எங்களின் சில கேள்விகளையும் முன் வைத்தோம். அவரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்! வாதம் வலுக்கவே “இவ்வாறாக கேள்வி கேட்க உங்களுக்கு உங்கள் தமிழ் ட்விட்டர்கள் பணம் கொடுக்கிறார்களா?” (Are u paid off to do such things… Your Tamil Tweeters?) என்றார். எங்களுக்கு கோபம் வந்தது. நீங்களாக இருந்தால் எவ்வளவு கொடுப்பீர்கள் என்றோம்.

அடுத்த வினாடியே அவர் அப்படி கேட்டதை அழித்து விட்டார்! மேலும் இன்னும் அவர் பேசியிருந்த சற்று கடுமையான வாதங்களையும் அழித்துவிட்டார். அதாவது நாங்கள்-அவர்-நாங்கள்-அவர்-நாங்கள்-அவர்-நாங்கள்-அவர்-நாங்கள் என்றிருந்த வாதங்கள் நாங்கள்- நாங்கள்-நாங்கள்-அவர்-நாங்கள்-நாங்கள்-அவர் என்றாகிவிட்டது!

ஒரு சாதாரண வாதத்திலேயே இவ்வளவு திருத்தங்களை செய்யும் அவர் சர்ச்சைக்குறிய வாதங்களை அழித்திருக்கமாட்டாரா என்ன?

இவ்வளவு ஏன்? சின்மயி-மகேஷ் மூர்த்தி வாதத்தைத்தான் ஊரே பார்த்ததே! இதற்கு மேலும் என்ன வேண்டும் சின்மயி ஒரு “Vindictive Liar” என்பதற்கு!

ட்விட்டர் இணையத்தில் ஒன்றரை ஆண்டுகளாக நான் (இக்கட்டுரையை எழுதுபவன்) இருந்தும் அவர் செய்தவற்றை விளக்க எனக்கு ஒரு நண்பனின் உதவி தேவைப்பட்டது என்றால் புதிதாக வருபவர்களுக்கு????

சின்மயி ரசிர்களுக்கு,

நமக்கு ஒருவரை பிடிக்குமாயின் அவர் பேசுவதெல்லாம் உண்மை என நம்புதல் தவறு. அப்படி நம்புதலாயின் நமக்கெதற்கு ஆறாம் அறிவு???

விகடன் பத்திரிக்கையில் சின்மயியின் தாயார் பேசியது மிகவும் முக்கிய/நல்ல விஷயம். ஆனால், அதற்கும் இந்த புகாருக்கும் என்ன சம்பந்தம்? இணையத்தில் யார் என்ன பேசினாலும்  போகிற போக்கில் யார் என்ன செய்தாலும் அதற்கு ராஜன் அவர்களே காரணம் என்ற தொனியில் பேசுகிறாரே அதை உணர முடிகிறதா??? “PETA” என்றதும் ஆதரிக்கும் நீங்கள் அவரே ‘சிக்கன்’ விளம்பரத்திற்கும் பாடியிருக்கிறாரே அதை எதிர்க்கவில்லையா?

இணைய சுதந்திரம் என்பதை செலிபிரிட்டிகள் இப்படித்தான் உபயோகிப்பார்களா??

இதன் முடிவை சட்டம் முடிவு செய்யும்!!!

எது எப்படியோ?  உங்கள் சின்மயி தன் நம்பகத்தன்மையை முழுவதுமாக இழந்துவிட்டார்.


நன்றி


சம்பத்தப்பட்ட சில பதிவுகள்:
    
மகேஷ் மூர்த்தி அவர்களின் கட்டுரை : http://t.co/6d5jFOPW

சின்மயி அவர்களின் விளக்கங்கள் (ஃபேஸ்புக் பக்கம்) : http://www.facebook.com/pages/Chinmayi-Sripada/130027849040?fref=ts

ராஜன் அவர்களின் விளக்கங்கள் : http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

இன்னும் பலவித ஆதரவுகள்/எதிர்ப்புகள் சமீப காலமாக ட்விட்டர் இணையத்தில் உலவுகின்றன…

வருகைக்கு நன்றி…

10 October 2012

என் வாழ்க்கையும் என் கண்களும்...

“Have u started……” ஒரு அழகான குறுஞ்செய்தி அனுப்பினாள் அவள்.

இருக்கற அவசரத்துல இது வேறயா என்று நினைத்துக்கொண்டு “Yep…. On d way” என பதில் அனுப்பிவிட்டு மணியை பார்த்தேன்.

மணி 10.23 உச்சகட்ட சாலை நெரிசலில் இருந்து தப்பி ஒடிய வண்டிகளில் எங்களுடையதும் ஒன்று.  என் நண்பன் மேலும் மேலும் வண்டியை முறுக்க, இன்னும் கடுப்புதான் வந்தது! ஒரு காரில் சிறு குழந்தை ஒன்று எங்களை பார்த்து சிரித்தது. அவசரத்தில் ஒரு டாட்டா காட்டிவிட்டு ஓடத்தொடங்கினோம். ரயில் நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது எங்கள் வண்டி. வானில் சூரியனும் மேகங்களுக்கு இடையில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தது.
மழை வரும் அறிகுறி!

பார்க்கிங், டோக்கன், டிக்கெட் இதையெல்லாம் தாண்டி நாங்கள் ஈரோடு ரயில் நடைமேடைக்கு வருகையில் மணி 10.35.

10.30 மணிக்கு வரவேண்டிய பாலக்காடு-திருச்சி பாசஞர் ரயில் ஒரு ஹை டெசிபல் அலறல் சத்ததுடன் வந்தது. போதாக்குறைக்கு மூன்று மொழிகளில் அறிவிப்பு வேறு. அறிவிக்கப்படாத ஓட்டப்பந்தயமாக இருந்தது சீட் பிடிக்கும் பணி. ஈரோட்டில் இஞ்சின் மாற்றப்படும் - அதற்கு ஒரு பத்து நிமிடம் ரயில் நிற்கும் என்பதால் எப்படியும் இடம் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு.

இந்த ஓட்டத்தில் நான் படியை நெருங்கியதும் ஒரு மாற்றுத்திறனாளி வந்தார். அவரை ஒரு முதியவர் ஏற்றிவிட, அவரை முதலில் தாங்கிப்பிடித்து  ஏற்றிவிட்டு, பிறகு அந்த முதியவர் ஏறும்போதும் தடுமாறிவிட, அவரையும் பிடித்து ஏற்றி விடுவதற்குள் சீட்டுகள் நிரம்பிவிட்டன. நான் ஏற்றிவிட்டிருந்த பெரியவர் திரும்பி நன்றி என்றார். வழிய விடுங்க பெரியவரே என்று நினைத்துக்கொண்டு உள்ளே ஏறினேன்…

ரயில் முழுவதும் கூட்டம் நம்பி வழிந்ததால் படியிலேயே நின்று கொண்டோம். எங்கள் பைகளை ஒரு ஓரமாக வைக்க, அங்கு அப்பா-அம்மா-மகன்-மருமகள்-பேரன் என்ற வடிவமைப்பில் ஒரு குடும்பத்துடனும் அவர்களின் கதைகளுடனும்  இடத்தை பகிர்ந்தோம். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் ஒரு அலறலுடன் ரயில் புறப்பட்டதும் படியில் அமர்ந்து மழை பெய்யக்காத்திருக்கும் காலநிலை காணும் வேலையில், பக்கத்தில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார். பாதி இடம் போனது.  "இது ஆவறதில்ல மச்சி" என்று படியில் இருந்த முதியவரிடம் இடம் பகிர்ந்துகொள்ள முடியாமல் எழுந்து நின்று,  இருக்கின்ற கடுப்பில் எல்லாம் பொறுத்து, பின் ஐபாட் எடுத்து காதை அடைத்துக்கொண்டால் அதில் நேற்று பாதியில் நிறுத்திய ‘பச்சைகிளிகள் தோளோடு’ பாடியது. இருந்த கடுப்பில் இது வேறா என்ற போது ஃபோன் துடித்தது. வைப்ரஷன். மீண்டும் அவள்….

“Hows going da” என்றாள்…

“It’s a terrible trip” என்று டைப் செய்தேன்….

அதை கவனித்த நண்பன் என்னைப்பார்த்து சிரித்தான்…

“ஏண்டா டேய்...” என்று சலித்துக்கொண்டேன்.

ஒரு நிமிடம்…. இது இப்படி முடியவேண்டியதா என்ன?  ச்சே ச்சே!
******** ரீவைண்ட்… ரீவைண்ட்… ரீவைண்ட்…. *******
அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் ஒரு அலறலுடன் ரயில் புறப்பட்டதும் படியில் அமர்ந்து மழை பெய்யக்காத்திருக்கும் காலநிலை காணும் வேலையில்...

******** ரீவைண்ட்… ரீவைண்ட்… ரீவைண்ட்…. *******
பாலக்காடு-திருச்சி பாசஞர் ரயில் ஒரு ஹை டெசிபல் அலறல் சத்ததுடன்...

******** ரீவைண்ட்… ரீவைண்ட்… ரீவைண்ட்…. *******
“Have u started……” ஒரு அழகான குறுஞ்செய்தி அனுப்பினாள் அவள்.

மழைபெய்யக்காத்திருக்கும் வானத்திலும் அழகாக என் பதிலுக்காக காத்திருப்பவளுக்கு பதில் அனுப்பிவிட்டு திரும்பிப்பார்க்கையில் ஒரு குழந்தை என்னை நோக்கி சிறு புன்னகையை உதிர்த்தது. அழகு! அவசரமென ரயில் பிடிக்கபோனாலும் சாலை நெரிசலில் சிக்கியிருந்தாலும் அந்தச் சிரிப்பு அப்போட்தைக்கு தேவையாகவே இருந்தது. திரும்பி சிரித்துவிட்டு கிளம்பினேன்.

உச்சபட்ச கூட்டாத்திலும் விடா முயற்சியாய் கால்கள் இல்லாவிட்டால் என்ன எனக்கு கைகள் இருக்கிறதே என்று ஒரு மாற்றுத்திறனாளி ஏற முயன்றார். அவருக்கு ஒரு முதியவர் உதவ, நானும் உதவினேன். பின் அந்த முதியவர் தடுமாறுகையில் நான் தாங்கிப்பிடித்தற்காக நன்றி சொல்லத்திரும்பினார். எவ்வளவு நிறைவு அவர் கண்களில்…

ரயில் புறப்பட்ட பின், இடம் இல்லாததால் படியில் அமர்திட, அந்த ஊரின் அழகு புலப்பட்டது!  படியில் அமர்ந்த்து ஊரை ரசித்தேன். அப்போது ஒரு பெரியவர் வந்து படியில் அமர்ந்தார். கால்களில்லாமல் ஒருவர் நடக்கும்போது நல்ல கால்கள் கொண்ட நான் தாரளமாக நிற்கலாம் என்று அவருக்கு முழு இடத்தையும் கொடுக்க எழுந்தேன். பின்னால் திரும்பி பார்க்கையில் ஒரு தந்தை தன் மகனுக்கு நல்ல கதை சொல்லிக்கொண்டிருந்தார். குடும்பம் என்றாலே தனி அழகுதானே! நான் நிற்பதை தாங்காத முதியவர் எனக்கும் ஒரு இடம் கொடுத்தார்.  சந்தோஷம் என்பது ஒருவருக்குள் செலுத்துவதல்ல ஒருவர் அவராகவே உணர்வது என்று நினைத்துக்கொண்டு ஐபாடை ஆன் செய்தேன்…

அதில் “அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம்” என்று பாடியது… உண்மைதான்! ஆனந்தம் எங்கும் உள்ளது! எனக்கு பிடித்த பாடல்… என்னை சுற்றிலும் ஆனந்தம் பரவுவதாய் உணர்கையில் என்னவளின் குறுஞ்செய்தி வந்தது….

“Hows going da” என்றாள் அவள்….

”Fantastic dear…” என்று பதில் அனுப்பினேன்…

நண்பன் என்னைப்பார்த்து சிரித்தான்…

பதிலுக்கு நானும் புன்னகைத்தேன்…

ஆம்!  "Happiness Exists Everywhere"  என்பார்கள்! 

அது எங்கோ எதிலோ வேறு உலகில் இருப்பதல்ல.... என்னைச்சுற்றியே இருக்கிறது!

"ஆனந்தம், அழகு" என்பதெல்லாம் உலகை பார்க்கும்  விதம் பொருத்தே அமைகிறது!