சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

30 October 2012


சின்மயி...


முடிவோ எமக்கிலை; மரணம் சொற்பிழை- 
உலகம் கற்சிலை,
உமிழ்வோம் எச்சிலை;

சிறைகள் அடைக்கட்டும்,
சிதைகள் எரிக்கட்டும் ,
ரணங்கள் வதைக்கட்டும்,
 
பிணங்கள் திசை எட்டும்;

முல்லை துஞ்சிய முதுபெரும் புலிக்கு முப்பதாண்டுகள்
மூச்சுத் திணறினீர்;
முள்வேலிக்குள் ஜனிக்கும் புலியால்
 அற்றுத் தீர்வீர்! 
முற்றும் திண்ணம்.

ஈழம் ஓர் நாள் நனவாய் மலரும் - அதன்
தேசிய கீதமும் என் விரல் எழுதும்.


சமீபத்தில் பிரபல தமிழ் கீச்சர் ’ராஜன்லீக்ஸ்’ ராஜன் உட்பட ஆறு பேர் மீது பிண்ணனிப்பாடகி சின்மயி அளித்த புகாரின் பேரில் ராஜன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே…

இது குறித்து தமிழ் தோழர்களின் ஒரு சிறிய அலசல்…

இந்த பிரச்சனை குறித்து எத்தனையோ பேர் தம் கருத்தை பதிவு செய்துவிட்டனர் என்றாலும்,

இந்த சின்மயி - ராஜன் பனிப்போர் பற்றி உறுதியான ஒரு நிலைப்பாடு எடுக்க அவர்கள் இருவருடன் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது பயணித்திருக்க வேண்டும் என்றாலும்,
  
எங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டியது எங்கள் கடமையாக உள்ளது. காரணம்,  அவர்களுடன் பயணித்த ஒரு அன்பர் எங்கள் குழுவிலும் இருக்கிறார்.

ராஜனும் நாங்களும்…
          
     நாங்கள் ராஜன் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறோம் ஆனால் நேரில் சந்தித்தது கிடையாது. அதற்கான இருமுறை முயன்றும் முடியாமல் போனதன் முழுக்காரணமும் நாங்கள் தான்.

எங்கள் குழுவில் இருவர் ராஜன் மீது மிகுந்த பற்றுடையவர்கள். அவரது எழுத்தாளுமைக்குச் சான்றுதான் மேற்கண்ட கவிதை. அப்படியான நண்பன் ஒருவன் தன் தொலைபேசி எண்ணை ராஜன் அவர்களிடம் கொடுத்து தனக்கு பிறந்தநாள் வருவதாகவும் அன்று அவரிடம் பேச ஆசைப்படுவதாகவும் கூறினான்… சற்றும் எதிர்பாராமல், நண்பனின் பிறந்தநாளன்று அழைத்தார் ராஜன். யாரென்றே தெரியாத ஒரு கடைநிலை கீச்சாளனின் விருப்பத்துக்காக முண்ணனி கீச்சாளர் அழைத்து பேசியது மிகுந்த ஆச்சரியமே!

ராஜன் அவர்களின் நண்பரும் பிரபல கீச்சாளருமான டேவிட் (@freeyavudu) என்பவர் எழுதியிருக்கும் குடைச்சல் கேள்விகள்’ இன்னும் பலவற்றை வெளிப்படுத்துகின்றது.
  
   ராஜன் அவர்களைப்பற்றி நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை…… ஆனால் சின்மயி பற்றி சொல்லியே ஆகவேண்டும்…

சின்மயி அவர்களின் நம்பகத்தன்மை இழப்பு:
    
     யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பது எங்களது குறிக்கோள்.

அப்படி நிறையபேரிடம் கேள்வி கேட்டிருக்கிறோம். சிலரிடம் நேரடியாகவும் சிலரிடம் இணையம் மூலமாகவும். ”சர்ச்சைக்குறிய அந்த ட்விட்டை சின்மயி ட்விட்டியிருந்தார். நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை அழித்துவிட்டார்” எங்கள் நண்பர் கூறினார். மேலும் ராஜன் அவர்களின் இந்த பதிவு: http://www.rajanleaks.com/2012/03/blog-post.html காரணமாகவும் சின்மயி அவர்களிடம் ட்விட்டரில் தொடர்பு கொண்டோம்…

”ராஜன் அவர்கள் பதிவில் இருந்த சில கேள்விகளையும் எங்களின் சில கேள்விகளையும் முன் வைத்தோம். அவரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்! வாதம் வலுக்கவே “இவ்வாறாக கேள்வி கேட்க உங்களுக்கு உங்கள் தமிழ் ட்விட்டர்கள் பணம் கொடுக்கிறார்களா?” (Are u paid off to do such things… Your Tamil Tweeters?) என்றார். எங்களுக்கு கோபம் வந்தது. நீங்களாக இருந்தால் எவ்வளவு கொடுப்பீர்கள் என்றோம்.

அடுத்த வினாடியே அவர் அப்படி கேட்டதை அழித்து விட்டார்! மேலும் இன்னும் அவர் பேசியிருந்த சற்று கடுமையான வாதங்களையும் அழித்துவிட்டார். அதாவது நாங்கள்-அவர்-நாங்கள்-அவர்-நாங்கள்-அவர்-நாங்கள்-அவர்-நாங்கள் என்றிருந்த வாதங்கள் நாங்கள்- நாங்கள்-நாங்கள்-அவர்-நாங்கள்-நாங்கள்-அவர் என்றாகிவிட்டது!

ஒரு சாதாரண வாதத்திலேயே இவ்வளவு திருத்தங்களை செய்யும் அவர் சர்ச்சைக்குறிய வாதங்களை அழித்திருக்கமாட்டாரா என்ன?

இவ்வளவு ஏன்? சின்மயி-மகேஷ் மூர்த்தி வாதத்தைத்தான் ஊரே பார்த்ததே! இதற்கு மேலும் என்ன வேண்டும் சின்மயி ஒரு “Vindictive Liar” என்பதற்கு!

ட்விட்டர் இணையத்தில் ஒன்றரை ஆண்டுகளாக நான் (இக்கட்டுரையை எழுதுபவன்) இருந்தும் அவர் செய்தவற்றை விளக்க எனக்கு ஒரு நண்பனின் உதவி தேவைப்பட்டது என்றால் புதிதாக வருபவர்களுக்கு????

சின்மயி ரசிர்களுக்கு,

நமக்கு ஒருவரை பிடிக்குமாயின் அவர் பேசுவதெல்லாம் உண்மை என நம்புதல் தவறு. அப்படி நம்புதலாயின் நமக்கெதற்கு ஆறாம் அறிவு???

விகடன் பத்திரிக்கையில் சின்மயியின் தாயார் பேசியது மிகவும் முக்கிய/நல்ல விஷயம். ஆனால், அதற்கும் இந்த புகாருக்கும் என்ன சம்பந்தம்? இணையத்தில் யார் என்ன பேசினாலும்  போகிற போக்கில் யார் என்ன செய்தாலும் அதற்கு ராஜன் அவர்களே காரணம் என்ற தொனியில் பேசுகிறாரே அதை உணர முடிகிறதா??? “PETA” என்றதும் ஆதரிக்கும் நீங்கள் அவரே ‘சிக்கன்’ விளம்பரத்திற்கும் பாடியிருக்கிறாரே அதை எதிர்க்கவில்லையா?

இணைய சுதந்திரம் என்பதை செலிபிரிட்டிகள் இப்படித்தான் உபயோகிப்பார்களா??

இதன் முடிவை சட்டம் முடிவு செய்யும்!!!

எது எப்படியோ?  உங்கள் சின்மயி தன் நம்பகத்தன்மையை முழுவதுமாக இழந்துவிட்டார்.


நன்றி


சம்பத்தப்பட்ட சில பதிவுகள்:
    
மகேஷ் மூர்த்தி அவர்களின் கட்டுரை : http://t.co/6d5jFOPW

சின்மயி அவர்களின் விளக்கங்கள் (ஃபேஸ்புக் பக்கம்) : http://www.facebook.com/pages/Chinmayi-Sripada/130027849040?fref=ts

ராஜன் அவர்களின் விளக்கங்கள் : http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

இன்னும் பலவித ஆதரவுகள்/எதிர்ப்புகள் சமீப காலமாக ட்விட்டர் இணையத்தில் உலவுகின்றன…

வருகைக்கு நன்றி…

1 comment:

  1. Thank you for posting this blog with relevant links. I linked this in my facebook page.

    ReplyDelete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன