தலை வெட்டப்பட்டு கிடக்கிறது குழந்தை
அதன் கண்களைப் பார்க்கும்
நிமிடங்களில்
கனவுக்கொடூரன் உயிர் பெறுகிறான்…
இந்தக் கனவுக்கொடூரனின்
கனவுகளில்
குழந்தைகள் பெரியவர்கள் என்ற பேதமில்லை
அவனது தற்கொலை எண்ணங்கள்
கொலையாக மாறும் தருணம் போதும்…
என் கண்ெணதிரே யாருமில்லை
கவனிப்பாரும் யாருமில்லை
என்றாலும்
மனம் ஒப்பாமல்
கையில் கிள்ளிய குழந்தையின்
குரல்வளையை
கடித்துத் துப்பும்
எண்ணத்தை கைவிட்டுவிடுகிறேன்.
நாளையும் இப்படித்தான் போய்த்தொலையும்
இருந்தாலும்
நாளைய கொலைகளை
இன்றே நிர்ணயிக்கத் தொடங்கிவிடுகிறேன்.
ஆனால்
இப்போது இட்டுச்செல்ல
கருணை இல்லை
கடவுளும் இல்லை
தற்கொலைக்கு காரணமும் இல்லை
இருந்தாலும்
கைகள் நடுங்குகின்றன
No comments:
Post a Comment
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன