முச்சந்திக் கடவுள் சிலை
தூக்கி நடக்கச் சொல்லி
அடம் பிடிக்கிறது
குழந்தை
இயலாமையால் அழத்தொடங்கும்
தாயின் ஊனத்தைக்
கண்டும் காணாமல்
கண்களை மூடிக்கொள்கிறது
முச்சந்திக் கடவுள் சிலை
***
திருடனின் காதலி
திருடனைக்
காதலித்த பெண்ணொருத்தி
கவிதையொன்றை
சொல்லிச் சென்றாள்
அது திருடப்பட்டதா
என யாருமே கேட்கவில்லை
திருடனைத்தவிர...
- ஷா
fantastic
ReplyDelete