கடைசிக் கவிதை
கடைசிக் கவிதையை
எழுதும் முன்
கனவுகளைத் திறந்து பார்க்கிறான்
கவிஞன்
அன்பான துணை
அழகான வாழ்வு
அமைதியான சுற்றம்
எனும் சாதாரண வார்த்தைகள் கூட
தோற்று சிதைந்ததை
எண்ணி வியந்து
எதுவும் எழுதாமலே செத்தான்
கடைசிக் கவிதை பிறந்தது...
- ஷா
****
பரத்தைப் பிணம்
கவிதை
இறக்கும் நேரத்தில் பிறந்த
அனாதைப் பெண் பிணம்
ஒன்று
வக்கற்று நிர்வாணமாய்
வரிசையில் கிடக்கிறது
அவள் வெட்கப்படவில்லை
நாணிக் குறுகவில்லை
கடைசி பேருந்தும்
கிளம்பிவிட்டதென
இரவைத் துணையாக்க
நினைத்து
ரோட்டோரம் நின்றவள்
அவள்
முதல் காதலனால்
விற்கப்பட்டு விபச்சாரியானவள்
அவள்
எல்லா இரவுகளிலும்
ஒன்றையே விதிக்கப்பட்ட
அவள்
ஒவ்வொருமுறையும்
முந்தானை விரிக்கும் வேளையில்
கனவுகளையும்
வாழ்க்கையையும்
சேர்த்தேதான் விரித்திருந்தாள்
இரவுதோறும் புணரும் முன்
ஒருவரேனும்
அவளைப் பெண்ணென
பார்த்திருந்திருக்கலாம்
பிணவறையில்
நிற்கதியாய் கிடத்தப்பட்டும்
வெட்கியிருப்பாள்
தற்கொலை செய்த பரத்தை!
- ஷா
selected words in the 2vathu kavithayil compact settings yennavo ninaichen thodaratum yar yenna sonnalum
ReplyDeleteselected words in the 2vathu kavithayil compact settings yennavo ninaichen thodaratum yar yenna sonnalum
ReplyDelete